மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலீஸ் ஸ்டேஷனில் காதல் திருமணம்; ஒரேநாளில் தூக்கில் தொங்கிய புதுமணப்பெண்.. விருத்தாசலத்தில் சோகம்.!
காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமண செய்த புதுமணப்பெண் ஒரேநாளில் தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், கஸ்பா தெருவில் வசித்து வருபவர் ஜெகன். இதே பகுதியில் வசித்து வந்த பெண்மணி கல்பனா. இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோரிடையே எதிர்ப்பை பெற்றுள்ளது.
இதனால் வீட்டில் இருந்து காதல் ஜோடி வெளியேறி, காவல் நிலையத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். திருமணம் நடந்த ஒருநாளில் திடீரென மணமகன் வீட்டினை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இதனால் மனமுடைந்துபோன காதல் மனைவி கல்பனா, தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.