வாகன ஓட்டிகளே உஷார்! இனி யாரும் தப்பிக்க முடியாது! அதிரடியில் இறங்கிய காவல்துறை!
நாளுக்கு நாள் சாலை விபத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. காவல்துறை எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் விபத்துகள் நடப்பதை குறைக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள்தான். தனெக்கென வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓடுவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது என சாலை விதிகளை மீறுவதால்தான் பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது.
சாலையில் பயணம்செய்யும் போது காவல் துறையினர் இருப்பதை கண்டால் தலைக்கவசம் அணிகிறோம், அதேநேரம் அங்கு யாரும் இல்லை என்றால் நாம் பாட்டுக்கு செல்கிறோம். தற்போது இதற்கு ஒரு ஆப்பு வைத்துள்ளது காவல்துறை.
அதவாது மூன்றாம் கண் என சொல்லக்கூடிய கண்காணிப்பு கேமிராவை அனைத்து இடங்களிலும் பொறுத்த உள்ளதாம் காவல்துறை. இதன் மூலம் ரோட்டில் காவல் துறையினர் இல்லாவிட்டாலும் கூட நீங்கள் ட்ராபிக் விதியை மீறும்போது கேமிராவில் பதிவாகியுள்ள உங்கள் வண்டி பதிவு எண் படி அபராத தொகைக்கான சலான் உங்கள் வீடு தேடி வருமாம். மேலும் உங்களுக்கான அபராத தொகையை நீங்கள் டிஜிட்டல் முற்றிலும் செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி கூறிய காவல் துறை அதிகாரி இதுவரை சென்னையின் முக்கியமான சாலைகளில் இலக்கான 15 ஆயிரத்து 345 சி.சி.டி.வி. கேமராக்களில், பத்தாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. இவற்றின் மூலம் சாலைகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, சாலை விதிகளை மீறுபவர்களைப் பிடித்து விடலாம் என்கின்றனர்.
இதன்படி, சென்னையில் புத்தாண்டு இரவில் இடைஞ்சல் தரும்படியான பயணத்திற்காக 186, அதிவேக பயணத்திற்கு 57, இரைச்சல் சைலன்சர் பொருத்தியதற்காக 16 மற்றும் மூன்று பேராக பயணித்ததற்காக 141 பேர் என மொத்தம் 401 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இனியாவது தயவு செய்து சாலை விதிகளை மதிப்போம் நம் உயிரையும், மற்றவர்கள் உயிரையும் காப்போம்.