தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உள்ளே நுழையாதே! கொரோனா எதிரொலி! அதிரடியாக 3000 வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 9 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 9ஆயிரம் பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 14நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. ஆனால் அரசின் அறிவுரையை மீறி சிலர் வெளியே நடமாடுவதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு தனிமைப்படுத்தபட்ட வீடு என்பதை அடையாளம் காட்டும் வகையில் அவர்களது பெயர், முகவரி, நம்பர் ஆகியவற்றைக் கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை வீட்டு வாசலில் ஒட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அந்த ஸ்டிக்கரில் உள்ளே நுழையாதே, இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகரங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 3000 வீடுகளில் இத்தகைய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதனைப் பார்த்தால் பிற மக்கள் அவர்களது வீட்டிற்குள் செல்வதை தவிர்த்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.