மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குற்றால அருவியில் மீண்டும் நீர்வரத்து., சுற்றுலாப் பயணிகள் ஆனந்தம்.!!
மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்து அருவி கொட்டி வருகிறது.
இதனால் தற்போது குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளை அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குற்றாலத்தில் குளித்து வருகிறார்கள்.
அதிகாலை 4 மணி அளவில் குற்றாலத்தில் அருவி நீர்வரத்து அதிகரித்து இருந்ததால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
தற்போது அருவியில் நீர்வரத்து படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து காலை 6 .30 மணி அளவில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.