திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு.. ஒருவர் அடித்துக் கொலை.. தாய் மற்றும் மகள் கைது!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். அதே பகுதியில் சங்கர் என்பவரின் மனைவி சாந்தியும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தி மற்றும் அவரது மகள் இருவரும் குழாயடியில் தண்ணீர் பிடித்து குடத்தை முனியம்மாள் வீட்டு வாசல் முன்பு வைத்துள்ளனர்.
இதனால் முனியம்மாளுக்கும், சாந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகளை பார்க்க மாறிய நிலையில், முனியம்மாளை, சாந்தியும் அவரது மகளும் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த முனியம்மாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். என்ன நிலையில் வீடு திரும்பிய முனியம்மாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே முனியம்மாளை தாக்கிய சாந்தி மற்றும் அவரது மகள் மீது கொலை குற்றம் இல்லாத மரணம் விளைவித்தல் சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.