திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கனமழையால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி.! மக்களே வெள்ளம் குறித்த அச்சம் வேண்டாம்.! வெதர்மேன் பேட்டி.!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற இடங்களில் கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் மற்றும் சென்னையில் உள்ள பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது.
தொடர்ந்து பெய்துவரும் மழையால், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியானது 20 அடிக்குமேல் உயர்ந்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலுள்ள நீரானது எப்போது வேண்டுமானலும் திறந்து விடப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், செம்பரம்பாக்கம் ஏரி குறித்த அச்சங்கள் தேவையற்றவை. இன்னும் இரு தினங்களில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் நிரம்பும். ஆனால் இப்போது வரை வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் வேண்டாம்.
ஏரி திறந்து விடப்பட்டாலே வெள்ளம் என நினைக்கவேண்டாம். 2015-க்கு பிறகு நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் தற்போதைக்கு மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத்தேவையில்லை இந்த மழை எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.