திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#HEAVY RAIN ALERT: 15 மாவட்டங்களில் கோடையின் வெயில் தாக்கத்தை குறைக்க கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, "நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. ஈரோட்டில் மலைச்சரக பகுதியில் 22.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி காரணமாக, 1-ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3-ம் தேதி முதல் ஐந்தாம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.