திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆன்லைன் காதலிக்கு பரிசு வழங்கி ஏமாற்றம்; வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை; நண்பர்களிடம் புலம்பி விபரீதம்.!
மேற்கு வங்கம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் சஞ்சய் பர்மல் (வயது 20). தற்போது மாமல்லபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் சைனீஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இணையவழியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண்ணின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் வீடியோ காலில் பேசி வந்து நட்பை வளர்த்து இருக்கின்றனர். ஒருகட்டத்தில் இருவரும் காதல் வயப்பட்ட, இளம்பெண்ணுக்கு சஞ்சய் பரிசு பொருட்களை ஆர்டர் செய்து கொடுத்துள்ளார்.
இதனிடையே, ஒருநாள் தனது காதலை பெண்மணியிடம் சஞ்சய் வெளிப்படுத்த, இளம்பெண் காதலை ஏற்க மறுத்து தான் நட்பாக பழகியதாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்துபோன சஞ்சய் தனது நண்பனிடம் காதல் தோல்வி குறித்து புலம்பி இருக்கிறார்.
இந்நிலையில், தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு சஞ்சய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.