மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னம்மா நீ இப்படி பண்ணிட்டியேம்மா...40 வயது காதலனுடன் ஓட்டம் எடுத்த 19 வயது பெண்.. அதிர்ச்சியில் பெற்றோர்..!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் பகுதியில்
வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கோமதி என்ற இளம் பெண்ணுடன் சசிகுமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் காதலித்து வருவது கோமதியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவரது குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய கோமதி சசிகுமாருடன் சென்றுள்ளார். மேலும் சசிகுமார் கோமதியை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கோமதியின் பெற்றோர் தங்களை தேடுவதை அறிந்த சசிகுமார் அவர்களால் தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அச்சமடைந்து கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு வேண்டி திருமண கோலத்தில் காதல் ஜோடி கீரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் கோமதியின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
மேலும் பேச்சுவார்த்தையின் முடிவில் கோமதி சசிகுமாருடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார். எனவே கோமதியின் விருப்பத்தை அறிந்த காவல்துறையினர் சசிகுமாருடன் கோமதியை அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோருக்கு பயந்து காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.