பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது.? கல்வித்துறை அதிரடி.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்திருப்பதால் பள்ளிகளை திறப்பது பற்றி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதற்க்கு முன்பு ஏற்கனவே பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அரசு அறிவித்தது.
இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு முடிவுகளை மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் ஜனவரி 8 ஆம் தேதி வரை கருத்துகளை கேட்க உத்தரவிடப்பட்டு உள்ளது . இந்தநிலையில், இன்று ஜனவரி 6 முதல் பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதன்காரணமாக அந்தந்த பள்ளிகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.