#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யார் இந்த கோகுல்ராஜ் - ஸ்வாதி..? பரபரப்பு வழக்கின் பின்னணி என்ன..!
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவரும், தன்னோடு கல்லூரியில் சக மாணவியாகப் படித்த ஸ்வாதியும் நெருங்கிப் பழகிவந்தார்கள். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் 2015 ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் அங்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜில் பதிவாகியிருந்ததாகச் சொல்லப்பட்டது.
அன்று இரவு நெடுநேரம் ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. அதையடுத்து தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் 110 சாட்சிகள் அரசுத் தரப்பில் சேர்க்கப்பட்டன. இதில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அதில் கோகுல்ராஜை தனக்கு யார் என்றே தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் தங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்து பொய் சாட்சி கூறிய ஸ்வாதி மீது குற்ற வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி நாமக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.