ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
விற்பனைக்கு வரும் விஜய் டிவி... போட்டி போடும் மூன்று நிறுவனங்கள்... எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா.?
தமிழில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி. இதில் வரும் வித்தியாசமான ஷோக்கள் மற்றும் சீரியலுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்டார் குழுமம் விஜய் டிவியை வாங்கிய பின்னர் அதை ஸ்டார் விஜய் என்று மாற்றம் செய்தது. அதன்பின்னர் ஸ்டார் விஜய் டிவியை டிஸ்னி நிறுவனம் கைப்பற்றியது.
டிஸ்னி நிறுவனம் விஜய் டிவியையும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தையும் வெற்றிக்கரமாக நடத்தி வந்த நிலையில் தற்போது திடீரென விஜய் டிவியை விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. டிஸ்னி நிறுவனம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தை மட்டும் வைத்து கொண்டு விஜய் டிவியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதனை வாங்குவதற்கு பிரபல மூன்று நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
டிஸ்னி நிறுவனம் விஜய் டிவியை விற்பனை செய்யவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் உலகில் முன்னணி நிறுவனங்களாக திகழும் ஜியோ, டாடா, சோனி ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் அதிக விலை கொடுத்து யார் வாங்கப் போகிறார் என்ற தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.