படிக்கிற பிள்ளைக்கு செல்போன் எதுக்கு..? வாங்கி கொடுக்க மறுத்த தாய்... மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மகன்..!



why-does-a-student-need-a-cell-phone-the-mother-refused

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய செல்போன் வாங்கித்தர கூறி அடம் பிடித்த மகனுக்கு தாய் செல்போன் வாங்கி தர மறுத்ததால் 200 அடி உயிர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி மகன் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை நியூ காலணியில் வசித்து வருபவர் சுமதி. இவருக்கு 15 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் சுமத்தியிடம் அவரது மகன் புதிய செல்போன் வாங்கித் தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் செல்போன் வாங்கி கொடுத்தால் மகனின் படிப்பு பாலாகிவிடும் என்று கருதிய சுமதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

cell phone

இதனால் விரக்தி அடைந்த சுமதியின் மகன் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள பகுதியில் இருக்கும் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சிறுவனிடம் சாமர்த்தியமாக பேசி கீழே இறங்க வைத்தனர். மேலும் அந்த சிறுவனுக்கு காவல்துறையினர் அறிவுரைகளைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஒரு செல்போனுக்காக சிறுவன் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.