53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஒரே நேரத்தில் 2 பேருடன் தகாத உறவு வைத்த மனைவி.. தட்டி கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடுமை!
கரூர் மாவட்டம் கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி மொத்த வீடு பகுதியை சேர்ந்தவர் ராசு - வள்ளி தம்பதியினர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் பொன்னம்பலம், சின்ன காளை. இவர்கள் அனைவரும் மரம் வெட்டும் தொழிலாளர்கள். இதனால் இவர்களுக்கு உதவியாக ராசுவின் மனைவி வள்ளியும் சென்று வந்துள்ளார்.
அப்போது வள்ளிக்கு பொன்னம்பலம் மற்றும் சின்ன காளை ஆகிய இருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதில் வள்ளி ஒரே நேரத்தில் பொன்னம்பலம் மற்றும் சின்ன காளை ஆகியோருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் ராசுவுக்கு தெரிய வர மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வள்ளி இருவரிடமும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு முன் ராசு அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த பொன்னம்பலம் மற்றும் சின்ன காளை ஆகிய இருவரிடமும் தனது மனைவியுடன் எப்படி பழகலாம் என ராசு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் பொன்னம்பலம், சின்னக்காளை மற்றும் வள்ளி மூவரும் சேர்ந்து ராசுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராசுவின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் வள்ளி மற்றும் அவரது காதலர்களான சின்னக்காளை மற்றும் பொன்னம்பலம் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.