மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை... அடித்து கொன்று புதைத்த மனைவி கைது...!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அதுமட்டுமின்றி ஆங்காங்கே சில எலும்பு துண்டுகளும் கிடந்துள்ளன. எனவே அந்த பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கு சிதறிக் கிடந்த மனிதனின் மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் வெள்ளப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த துரைபாபு என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த ஒரு குடும்பம் காணாமல் போனதை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அந்த குடும்பத்தில் உள்ள சித்ரா என்ற பெண்ணிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், சித்ரா இவ்வாறு கூறினார். சக்திவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததை எனது கணவர் சந்திரன் நேரில் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரத்தில் எங்களை தாக்கத் தொடங்கினார். எனவே அருகில் இருந்த கட்டையை எடுத்து நானும், சக்திவேலும் சேர்ந்து அடித்து சந்திரனை கொலை செய்து அருகில் புதைத்துவிட்டோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சித்ராவையும், சக்திவேலுவையும் கைது செய்தனர்.
எலும்புக்கூடுகளை கண்டெடுத்த 10 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.