திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணமான ஏழு நாளிலேயே காதல் கணவரை ஜெயிலுக்குள் தள்ளிய ஆசைமனைவி.! வெளியான திடுக்கிடும் சம்பவம்!!
சேலம் அழகாபுரம் வாழப்பாடி பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மகன் சுரேஷ்குமார். இவர் டைல்ஸ் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ்குமார் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோபியா என்பவரை காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாத அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் சுரேஷ்குமார் மற்றும் சோபியா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல இடங்களில் சுற்றி திரிந்த அவர்கள் பெற்றோர் வீட்டிற்கு செல்லாமல் சூரமங்கலம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே சமூகம் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் இது பெரும் மோதலாக மாறியது. இந்நிலையில் மனமுடைந்த சோபியா இனிமேல் அவருடன் வாழ முடியாது என உறுதி செய்து தனது காதல் கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சுரேஷ்குமாரின் தாய் மற்றும் தந்தை மீதும் புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் குமாரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது பெற்றோர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் இவ்வாறு திருமணமான 7 நாளிலேயே காதல் கணவரை இளம்பெண் சிறைக்குள் தள்ளியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.