மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பத்தல., பத்தல., வரதட்சணை கேட்டு சித்ரவதையால் பெண் தற்கொலை; காவல்துறை அதிகாரி குடும்பத்துடன் பகீர் செயல்.!
தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த கணவரால் 3 வயது குழந்தையை பரிதவிக்கவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள போரூர், காரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முத்துச்செல்வன். இவரின் மனைவி ராவனம்மா. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். தம்பதியின் மகள் நிவேதா (வயது 23). ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை காவல் அதிகாரி சங்கர்.
சங்கருக்கும் - நிவேதாவுக்கும் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிக்கு நேகா என்ற 3 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறியாது. திருமணத்தில் நிவேதாவுக்கு 12 சவரன் நகை, ரூ.15 இலட்சம் ரொக்கம் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட வரதட்சணை போதவில்லை என்று கருதிய சங்கர் மற்றும் அவரின் குடும்பத்தினர், நிவேதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவரை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளனர்.
இதுகுறித்து நிவேதா ஏற்கனவே தாயாரிடம் தெரிவித்து இருந்த நிலையில், ஒருகட்டத்திற்கு மேல் தொல்லை அதிகரித்ததால் ராவனம்மா தனது மகளை கரம்பாக்கத்தில் இருந்த வீட்டிற்கு தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். கடந்த சில நாட்களாகவே நிவேதா தனது வாழ்க்கையை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வளசரவாக்கம் காவல் துறையினர், நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், நிவேதா எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தார் வரதட்சணை கொடுமை செய்ததால் விபரீத முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.