ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
எனக்கு பிடித்த வாழ்க்கையை தேடி செல்கிறேன்... மனைவியின் கடித்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
சேலத்தில் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி - சரண்யா தம்பதியினர். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி தனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் செல்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். அதனையடுத்து பூபதி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சரண்யா கண்ணன் என்பவருடன் குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது. அதன்பின் போலீசார் சரண்யாவை அழைத்து பூபதியுடன் சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளனர். ஆனால் சரண்யா அதற்கு மறுப்பு தெரிவித்து கண்ணன் உடனேயே சென்று இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பூபதி, கண்ணனை அழைத்து சமாதானம் பேச வருமாறு அழைத்துள்ளார். இருவரும் திருவாக் கவுண்டனூரில் உள்ள இருசாயி கோயில் அருகே சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பூபதி , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை பல இடங்களில் வெட்டி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த கண்ணன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பூபதியை தேடி வருகின்றனர்.