திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவனை கொன்று வீட்டில் புதைத்துவிட்டு, அதே வீட்டில் ஒரு வாரம் வசித்த மனைவி!
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அருகே உள்ள செஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகிரி. இவரது மனைவி பூங்கொடி. இருவரும் கூலி தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சமாதானம் ஆகி, கணவனோடு சேர்ந்து வாழும் முடிவோடு பூங்கொடி வந்ததாகவும், இருப்பினும் அவ்வப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 18 நாட்களுக்கு முன்பாக குழந்தைகள் இருவரும் உறவினர்கள் திருமணத்திற்கு சென்றபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பூங்கொடி ராஜகிரியை தாக்கி கொலை செய்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து விட்டு, ஒரு வாரமாக அந்த வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார்.
ராஜகிரி வெளியூர் சென்றிருப்பதாக பிள்ளைகள் மற்றும் உறவினரகளிடம் பூங்கொடி கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பூங்கொடியும் தலைமறைவானார். இந்தநிலையில், பூங்கொடியின் மகள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது கழிவறை அருகே ஒரு இடத்தில் பழைய பொருட்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுகுறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார் பூங்கொடியின் மகள். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில், ராஜகிரியின் உடல் புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள பூங்கொடியை தேடி வருகின்றனர்.