திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தகாத உறவு; பாலியல் டார்ச்சர்.! பக்காவா பிளான் போட்டு மனைவி செய்த கொடூரம்.! பகீர் சம்பவம்!!
கடலூர் மாவட்டம் T. பாளையம் பகுதியில் புற்றுகோவில் ஒன்று உள்ளது. அதன் அருகே இருந்த கரும்பு தோட்டத்தில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. இந்நிலையில் தோட்டத்திற்கு வேலைக்கு வந்தவர்கள் துர்நாற்றம் வீசும் இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு முகம் மற்றும் உடலின் சில பகுதிகள் சிதைந்த நிலையில் ஆண்சடலம் ஒன்று கிடந்துள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார்கள் உயிரிழந்த அந்த நபர் யார் என தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த நபர் வடலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் எனவும், அவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார் எனவும் தெரியவந்தது. பின்னர் அவரது மனைவி மஞ்சுளாவிடம் போலீசார் விசாரித்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது ராஜசேகர் மற்றும் மஞ்சுளாவிற்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜசேகருக்கு திருப்பூரைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. அதனால் அவர் தனது குடும்பத்தினருக்கு பணம் எதுவும் வழங்காததால் பெண்பிள்ளைகள் மற்றும் மஞ்சுளா பெருமளவில் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். அது மட்டுமின்றி ராஜசேகர் தினமும் குடித்து விட்டு வந்து மஞ்சுளாவிற்கு பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
மேலும் மஞ்சுளா ஒத்துழைக்க மறுத்தால் அவரை கடுமையாக தாக்கி கொடுமைபடுத்தியுள்ளார். மேலும் தொடர்ந்து பல கஷ்டங்களை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை தாங்கிக் கொள்ள முடியாத மஞ்சுளா தனது தோழி வினோதினியுடன் சேர்ந்து அவரைக் கொல்ல திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் உயிரிழந்த அவரை யாருக்கும் சந்தேகம் வராதவாறு கரும்பு தோட்டத்தில் தூக்கி வீசியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் மஞ்சுளா வினோதினி, அவரது கணவர் சசிகுமார், அவருடைய நண்பர் மோகன் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர்.