திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பல ஆண்டுகள் வெளிநாட்டில்... தாயாக திரும்பியவருக்கு குடும்பத்தினரால் நிகழ்ந்த சோகம்...நடந்தது என்ன.?
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - தீபா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஆறுமுகம் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த கிராமமான நெசலூர்க்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆறுமுகம் மனைவியுடன் மட்டுமின்றி மகன் மற்றும் மகளுடனும் சண்டையிட்டு வந்துள்ளார். சம்பவத்தினத்தன்று ஆறுமுகம் குடிபோதையில் வந்து தூங்கி விட்டு மறுநாள் காலை பார்த்த போது இறந்து கிடந்ததாகவும் தீபா உறவினர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் இறந்து கிடந்த ஆறுமுகத்தின் கழுத்தில் காயம் இருப்பதை கண்ட ஆறுமுகத்தின் சகோதரன் இச்சம்பவம் குறித்து போலீல் புகார் கொடுத்துள்ளார். போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.
அதனையடுத்து போலீசார் ஆறுமுகத்தின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் மூவரும் சேர்ந்து தான் ஆறுமுகத்தின் கழுத்தை கயிற்றால் நெறித்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளனர்.
அதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதில் தீபாவை கடலூர் மத்திய சிறைக்கும் மகன் மற்றும் மகளை கூர்நோக்கு பள்ளிக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.