மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே... நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி...
கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ரங்கன் - கோகுல ஈஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து ரங்கன் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்.
ரங்கன் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கம் போல் குடித்து விட்டு வந்து ஈஸ்வரியுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் பயங்கர கோபத்தில் இருந்துள்ளார் ஈஸ்வரி.
ஆத்திரம் தாங்க முடியாமல் இருந்த ஈஸ்வரி நள்ளிரவு 11. 30 மணியளவில் தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் பெரிய கல்லை போட்டுள்ளார். ரங்கனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரங்கனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு ரங்கனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.