திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ராத்திரியானாலே கிசுகிசு தான்.. செல்போனில் மனைவி செய்த கேவலம்.. கணவரின் கொடூர முடிவு.!
ராமநாதபுரத்தில் உள்ள தாயுமானசுவாமி கோவில் தெருவில் வசிக்கும் கொத்தனாரான பன்னீர்செல்வம் சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அஜய் என்ற 16 வயது மகனும், அக்ஷிதா என்ற 11 வயது மகளும் இருக்கின்றனர்.
சரண்யா ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஒரு பல் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட அந்த இளைஞருடன் அடிக்கடி இரவு நேரங்களில் செல்போனில் சரண்யா பேசி வந்துள்ளார். இது கணவர் பன்னீர் செல்வத்திற்கு தெரிய வர குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும், தகுதியை மீறி சரண்யா கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார்.
சமீபத்தில் இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட அப்போது பன்னீர்செல்வம் சரண்யாவை கலக்கியுள்ளார். இந்த விஷயம் காவல் நிலையம் வரை சென்றது. பின்னர், போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருந்தாலும் உடைந்த கண்ணாடி ஒட்டாது என்பதைப் போல இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட சரண்யா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் அவர்களுக்குள் சமரசம் செய்து பெரியவர்கள் சேர்த்து வைத்தனர்.
இந்த நிலையில் சம்பவ தினத்தில் சரண்யா தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த பன்னீர்செல்வம் மாமனார் வீட்டிற்கு சரண்யா ஃபோன் பேச தான் சென்றுள்ளார் என்று நினைத்து கத்தியுடன் அங்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த சரண்யாவின் வாயை பொத்தி கத்தியால் குத்தி அவரை கொன்றுள்ளார்.
தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்ற அவர் தன் வயிற்றில் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். தந்தையைக் காணாது இருந்து பார்த்த மகள் வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையை பார்த்து கத்தியுள்ளார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தாயின் கள்ளக்காதல் பழக்கத்தால் பதின்ம வயது குழந்தைகள் இருவரும் அனாதையாக நிற்கின்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.