மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்ற குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரியின் மனைவி...! அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர்தான் அழகுதுரை.
இவர் காவல் துறையில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஜெயமணி என்பவர் தான் இவரது மனைவி.
கடந்த சில நாட்களாகவே அழகுதுரைக்கும் அவரது மனைவி ஜெயமணிக்கும் இடையே குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அழகுதுரையின் மனைவி ஜெயமணி அவர்களது 2 குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
மேலும் கொலை செய்த பின்பு அவரது மனைவி ஜெயமணியும் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து விட்டார்.
காவல்துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது சடலத்தை கைப்பற்றி தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் அவர்களின் உடலை எடுத்துச் செல்லும் போது தங்க சங்கிலி ஜெயமணியின் கழுத்தில் இருந்ததை கவனித்துள்ளார்.
மேலும் அந்த தங்க சங்கிலியை ஆம்புலன்ஸ் டிரைவர் பறித்துள்ளார்.
இதை பார்த்த அங்கு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.