#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ளக்காதலன் மீது கொண்ட மோகம்: கணவனுக்கு ஒன்றுக்கு இரண்டு முறை விஷம் கொடுத்து கொன்ற கொடூர மனைவி..!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷம் வைத்து கொலை செய்த மனைவியை கொளத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள காரைக்காடு என்கிற கர்நாடக எல்லை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சக்திவேல் (37). இவரது மனைவி புகழரசி (27). இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் முத்துக்குமார் (29). இவருக்கும் சக்திவேலின் மனை புகழரசிக்குக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
தொடக்கத்தில் இதை அறியாத சக்திவேல், நாளடைவில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்காணித்து அறிந்து கொண்டுள்ளார். இவர்களது கள்ள உறவு குறித்து அறிந்த சக்திவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இருந்த போது சக்திவேல் இல்லாத சமயங்களில் அவர்கள் உல்லாசம் அனுபவிப்பது தொடர்ந்தது.
மீண்டும் சக்திவேல் தனது மனைவி புகழரசியை கண்டித்துள்ளார். கள்ளக்காதலனின் மீது போதை கொண்டிருந்த புகழரசி கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த சக்திவேலுக்கு தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மயக்க நிலையில் இருந்த சக்திவேலுக்கு விஷம் கலந்த பாலை கொடுத்துள்ளார். இருந்தபோதும் சக்திவேல் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்த அவர் மீண்டும் விஷம் கலந்த உணவை கொடுத்துள்ளார். இதன் காரணமாக சக்திவேல் மயக்க நிலையில் இருந்தபடியே உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை சக்திவேல் திடீரென இறந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு புகழரசி தகவல் தெரிவித்துள்ளார். 37 வயதான சக்திவேல் திடீரென உயிரிழந்ததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் முத்துசாமி கொளத்தூர் காவல் நிலையத்தில், தனது அண்ணன் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கொளத்தூர் காவல்துறையினர், சக்திவேலின் சடலத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புகழரசிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இளைஞருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த கொளத்தூர் காவல்துறையினர் புகழரசி மற்றும் முத்துக்குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.