மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா!! பேஷ் பேஷ்!! தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் எத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனை தெரியுமா??
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும்நிலையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் நேற்றிலிருந்தே வியபாரம் சூடுபிடிக்க தொடங்கியது.
அதன்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.58.37 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடிக்கு நேற்று மது விற்பனை நடைபெற்றுள்ளது
திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடி அளவுக்கும், கோவை மண்டலத்தில் ரூ.48.32, சேலம் மண்டலத்தில் ரூ.47.79 கோடிக்கும் நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.