மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன சொல்லுறீங்க...தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றமா..
தமிழகத்தில் இனி வழக்கம் போல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து சில காலம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின் ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரத்தில் மட்டுமே மாற்றம் ஏற்ப்பட்டது.அதன்படி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்தன.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.