திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பரபரப்பு... அதிகாரிகளின் நிர்பந்தத்தால் தற்கொலைக்கு முயன்ற பெண் எஸ்ஐ.! உண்மை நிலவரம் என்ன.?
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டையில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த ரூபஸ்ரீ (26) என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரூபஸ்ரீ (26). இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருமாறு ரூபஸ்ரீக்கு மூத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் நிர்பந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தனது காவலர் குடியிருப்பில் அதிகமான அளவு வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு ஏற்றிருக்கிறார். இதனைப் பார்த்த அவரது கணவர் உடனடியாக மீட்டு வாலாஜாபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு ரூபஸ்ரீக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.