மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ... ஐயோ... போச்சே..! ரூ.1 கோடிக்கு ஆசைப்பட்டு 2 கோடியை இழந்த கோவில் அர்ச்சகர்.!
புதுச்சேரியில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக இருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கு சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 55 வயது நிரம்பிய ரமா என்கிற பெண்ணும் அவரது மகன் சபரி என்பவரும் அறிமுகியுள்ளனர். ரமாவும், சபரியும் தங்களை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றுவதாக கூறினர். இந்தநிலையில் அவர்கள், கிருஷ்ணனிடம் நீங்கள் புதிய வீடு கட்டுவதற்காக ரூ.1½ கோடி பணம் கடனாக பெற்று வீடு காட்டினாள் 6 மாதம் கழித்து அரசே உங்களது கடனை தள்ளுபடி செய்துவிடும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அவர்கள் கூறியதை நம்பிய கிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.2½கோடி வரை அவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த தொகையை கிருஷ்ணன் பல்வேறு நபர்களிடம் கடன் பெற்று வழங்கி உள்ளார். இந்தநிலையில், கிருஷ்ணனுக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கிருஷ்ணன் தனக்கு புதிய வீடு எதுவும் வேண்டாம். தான் கொடுத்த பணத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிடுங்கள் என ரமா, சபரி ஆகியோரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கிருஷ்ணனை மிரட்டிவந்துள்ளனர். ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணன், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ரமா, அவரது மகன் சபரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.