மு.க.ஸ்டாலினிடம் ஒரே ஒரு கேள்வி கேட்ட பெண்.! உங்களுக்கு பதில் சொல்ல முடியாது வெளில போங்க.. என கூறிய ஸ்டாலின்.! கோவையில் பரபரப்பு



women-ask-question-to-mk-stalin

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார். பின்னர் கூட்டத்தில் இருந்த மக்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார். 

அப்போது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிலையில், கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள் என ஸ்டாலினிடம் கேட்டார். 

அப்போது, நீங்கள் எந்த ஊர் என அவர் கேட்டதைத் தொடர்ந்து மைல்கல் என பெண் கூறினார். இதைடுத்து, அது எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது என ஸ்டாலின் கேட்டார். ஆத்திரமடைந்த அந்த பெண் இது கூடத் தெரியாமல் தான் நீங்கள்  கிராமசபை கூட்டம் நடத்துகிறீர்களா எனக் கேட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. நீங்கள் அமைச்சர் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் என தெரிவித்தார். பின்னர் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்க முயன்ற பெண் வெளியேற்றப்பட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.