#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடவுளே.. இப்படியொரு அவலமா..நடுரோட்டில் இறந்து, JCBயில் அள்ளி செல்லப்பட்ட பெண்ணின் உடல்! கலங்கவைக்கும் சம்பவம்!!
கர்நாடகா சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குரதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா. 42 வயது நிறைந்த இவரது கணவர் உயிரிழந்த நிலையில் அவர் தன் இருபிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை.
இந்த நிலையில் நேற்று சந்திரகலா சிந்தாமணியில் இருந்து குரதஹள்ளி கிராமத்திற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது திடீரென மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கொரோனா அச்சத்தால் அவர் அருகிலேயே செல்லவில்லையாம். இந்நிலையில் சிறிது நேரத்தில் சந்திரகலா துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த அவர்கள் சந்திரகலாவின் உடலை மண் அள்ளும் JCB இயந்திரத்தின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சந்திரகலாவின் உடலை பொக்லைன் எந்திரத்தின் மூலம் எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி இதயத்தை நொறுங்கசெய்துள்ளது.