#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தன்னை கடித்த கட்டுவிரியன் பாம்பு! பேக் செய்து கையோடு கொண்டு சென்ற பெண்.! ஆடிப்போன மருத்துவர்கள்!!
தூத்துக்குடியில் பெண் ஒருவர் தன்னை கடித்த கட்டிவிரியன் பாம்போடு மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திக்காடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி அழகு ராணி. 35 வயது நிறைந்த அவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் பதறிப்போன அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
மனைவியின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த சரவணன் அழகுராணியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அழகுராணி தன்னைக் கடித்த பாம்பை பிளாஸ்டிக் பையில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும் அங்கு மருத்துவர் மற்றும் ஊழியர்களிடம் இதுதான் தன்னை கடித்த பாம்பு என கூறியுள்ளார்.
பாம்பை கண்டதும் அனைவரும் பயந்து நடுங்கியுள்ளனர். பின்னர் அது உயிருடன் இல்லை என தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.பின்னர் அழகு ராணிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது . இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.