மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவிலுக்கு சென்ற பெண்ணின் நகையைப் பறித்து சென்ற இளைஞர்கள் கைது.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோகண்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் - காமாட்சி தம்பதியினர். இந்த நிலையில் காமாட்சியை நேற்று முன்தினம் செங்கல்பட்டில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு தனது மருமகள் சுபாஷினியோடு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது அழகு சமுத்திரம் பொன்னியம்மன் கோயில் அருகே வந்த போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காமாட்சியின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இதனையடுத்து உடனடியாக செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஸ்வநாதன், சுப்பிரமணி, கிஷோர் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் அவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்