#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிளாஸ்டிக் பையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்... பதறிய மருத்துவமனை ஊழியர்கள்!! நடந்தது என்ன.?
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் - அழகு ராணி தம்பதியினர். இவர்கள் விவசாய வேலை செய்து வருகின்றனர். சம்பவ தினத்தன்று வழக்கம்போல் அழகு ராணி அவர்களது தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அழகு ராணியை கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்து நிலையில் கூச்சலிட்டுள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சரவணன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண் தன்னை கடித்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் பையில் சடலமாக எடுத்து சென்றுள்ளார்.
பையில் பாம்பு இருப்பதை கண்டு பதறிய மருத்துவமனை ஊழியர்கள் பின்னர் சடலமாக இருப்பதை கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர். குறித்த பெண்ணிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.