பியூட்டி பார்லரில் இளம்பெண் செய்த காரியம்.! பதறிப்போய் பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!



women-comit-suicide-in-beauty-parlour

கோவை இடையர்பாளையத்தில் வசித்து வந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஷோபனா. இவர் பிசிஏ படித்து முடித்தநிலையில் பாப்பம்பட்டி பியூட்டி பார்லரில்  கடந்த இரு வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வழக்கம் போல் ஷோபனா வேலைக்குச் சென்ற நிலையில், திடீரென ஷோபனாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் உடனே வந்து அவரைக் கூட்டிச் செல்லுமாறும் பியூட்டி பார்லரிலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

beauty parlour

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஷோபனாவின் பெற்றோர் உடனே பியூட்டி பார்லருக்கு விரைந்துள்ளனர். அங்கு  பியூட்டி பார்லரில் ஷோபனா தூக்கில் தொங்கி இறந்தநிலையில் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அனுப்பப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், தன் மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.