#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியுடன் பேச வெளியூரிலிருந்து போன் செய்த கணவர்! அறைக்கு சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரிடி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் மதிராணி. இவர் ரெட்டியப்பட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக இருந்துள்ளார். இவரது கணவர் அருண்குமார். இவர் ஆந்திர மாநிலத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவிலிருக்கும் அருண்குமார் மனைவி மதிராணி போன் செய்துள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் போனை எடுக்காததால் தொடர்ந்து தனது தந்தையை தொடர்பு கொண்டுள்ளார்.
இந்நிலையில் அருண்குமாரின் தந்தை மதிராணியின் அறைக்கு சென்றுள்ளார்.ஆனால் அங்கு மதிராணி தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மதிராணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதிராணி வேலைச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.