நைட்டி அணிந்து கடைக்கு சென்ற பெண்! இரவில் நேர்ந்த பெரும் விபரீதம்! வெளியான பகீர் சம்பவம்!



women-dead-by-bursting-transformer

சென்னை சூளைமேடு புதிய மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி லீமா ரோஸ்.அவர்  தனது வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். மேலும் அப்பொழுது அவர் நைலானால் ஆன நைட்டி அணிந்து சென்றுள்ளார். இவ்வாறு லீமா ஆண்டவன் தெரு, ஜங்ஷன் அருகே சென்றபோது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியில் இருந்த கேபிள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. 

இதில் அந்த கேபிளில் இருந்து தீப்பொறிகள் ஆங்காங்கே சிதறி விழுந்துள்ளது. இந்நிலையில் சீமா அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் தீப்பொறி ஒன்று லீமாவின் நைட்டியின் மீது விழுந்துள்ளது. இந்நிலையில் நைலான் துணியால் ஆன நைட்டி வேகமாக தீ பரவி உடல் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிய துவங்கியது. இதில் அவர் கதறி அழுதுள்ளார்.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே விரைந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

nighty

ஆனால் அதற்குள் உடலில் 80 சதவீதம் கருகி அதிக பாதிப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார்,  லீமா நைலான் நைட்டி அணிந்து இருந்ததாலேயே அதிவேகமாக தீ பரவி அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது என கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.