சட்டவிரோத கருகலைப்பால் பரிதாபம்.. செவிலியர் துடிதுடிக்க மரணம்.!



women-dead-by-illegal-abortion

சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததால், செவிலியர் ஒருவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அருகாமையில் லப்பைகுடிகாடு பகுதியில் வசித்து வருபவர் வேளாங்கண்ணி. இவர் செவிலியராக பணியாற்றி வரும் நிலையில், நேற்று மாலை இவர் அத்தியூருக்கு சென்றுள்ளார். அப்போது மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் இளையராஜா என்பவர், அவரின் குழந்தைகளை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்களது தாய் வயிறு மற்றும் நெஞ்சு வலி காரணமாக தன்னிடம் சிகிச்சை பெற வந்துள்ளார். 

மேலும், தற்போது மயங்கி கிடப்பதாக தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து 3 குழந்தைகளும் அங்கு சென்று பார்த்த நிலையில், வேளாங்கண்ணி மேஜையில் உடலில் எவ்வித அசைவுமின்றி இருந்துள்ளார்.

Perambalur

இதனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் முன்பே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ந்துபோன அவரது கணவர் கதறி அழுதுள்ளார்.

அத்துடன் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கணவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், வேளாங்கண்ணியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வில், கருக்கலைப்பு செய்ததே அவரது உயிரிழப்புக்கு முக்கியமான காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து தலைமறைவான மெடிக்கல் ஷாப் நடத்தி வந்த இளையராஜாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், செவிலியராக பணிபுரிந்து வந்த வேளாங்கண்ணி ஏன் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டார்? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.