ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அந்த பாட்டி எப்படி துடிச்சிருப்பாங்க!! தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பாட்டி.. பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்..
தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இவர்களுடன் செல்வத்தின் தாயார் மேனகாவும்(60) வசித்துவந்துள்ளார். மேனகாவிற்கு கண்பார்வை குறைபாடு மற்றும் சர்க்கரை நோய் இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று மேனகா சாப்பிட்டுவிட்டு சர்க்கரை நோய்க்கான மாத்திரையை வாயில் போட்டுகொண்டு அருகில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குதித்துள்ளார். ஆசிட்டை குடித்த சில நிமிடங்களில் நெஞ்செரிச்சல், வயிற்றுவலியால் மேனகா அலறியுள்ளார்.
அந்நேரம் பார்த்து வீட்டில் யாரும் இல்லாததால், மேனகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கப்பட்டுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி மேனகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.