செங்கல்பட்டு அருகே இளம்பெண் மரணம்! திமுக நிர்வாகி காரணமா?



women death for DMK member


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நைனார் குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு திமுகவைச் சேர்ந்த இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் மற்றும் அவரின் சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், மற்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனம், அறிக்கை, நிவாரணம் போன்றவற்றை அறிவிக்கும் திமுக, இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என்று பலரும் சமூக ஊடங்களில் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ” செங்கல்பட்டு நைனார்குப்பம் பெண்ணின் தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும் #JusticeForSasikala ” என ட்வீட் செய்து இருக்கிறார். 

இதற்கிடையே தேவேந்திரனை திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சித் தலைவர் மு.க. ஸடாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.