53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
போதையில் தன்னுடன் தனிமையில் இருந்த கள்ளக்காதலனை தாக்கிய பெண்!! சினிமாவில் போல நடந்த சம்பவம்!
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சார்ந்தவர் அய்யாபிள்ளை. இவர் அதே பகுதியை சார்ந்த பெண் பரிமளா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பரிமளாவுக்கு அய்யாபிள்ளை இரண்டாவது கணவர் எனவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்தநிலையில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 13 ம் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பரிமளா கள்ளக்காதலன் அய்யாபிள்ளையை அடித்து கொலை செய்து வீட்டின் கழிவுநீர் தொட்டியில் வைத்துள்ளார். மேலும் தொட்டியை சிமெண்ட் பூசி மறைத்துள்ளார்.
அய்யாபிள்ளை சில நாட்கள் ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரது சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன், கழிவுநீர் தொட்டியை உடைத்து அய்யாபிள்ளையின் சடலத்தை எலும்புக் கூடாக மீட்டனர்.
இதனையடுத்து, போலீசார் பரிமளவிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.