திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கழுத்து அறுக்கப்பட்டு மர்மமாகக் கிடந்த தாய்.. மகன் போலீசில் புகார்!
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்னபட்டு. இவருக்கு ராமன் என்ற கணவனும் விக்னேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அன்னபட்டு கணவர் ராமரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதில், அன்னபட்டு நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய பிற்பகல் வயலுக்கு சென்ற அன்னபட்டு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அன்னபட்டுவின் மகன் விக்னேஷ் தனது தாயைத் தேடி விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே வயலில் கழுத்து அறக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் கீழப்பழுவூர் போலீசாருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் அன்னபட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.