மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் ஓட்டை... கீழே விழுந்த பெண் பணியால் பரபரப்பு!!
சென்னை, திருவேற்காட்டிலிருந்து வள்ளலார் நகர் நோக்கி சென்ற பேருந்தில் திடீரென உள்பக்க பலகை உடைந்து விழுந்து ஓட்டை ஏற்பட்டதில் பெண் பயணி ஒருவர் சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளலார் நகர் நோக்கி சென்ற பேருந்து எண் 59 என்ற பேருந்து அமைந்தகரை அருகே வந்த போது திடீரென பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்துக்குள்ளானது . அப்போது பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் சருக்கி கீழே விழுந்துள்ளார்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். அதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.