திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தகாத வார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் திட்டியதாக தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்.!
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கஜலட்சுமி என்பவர் 2 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கஜலட்சுமியின் தாய் தந்தை இருவருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்தநிலையில் கஜலட்சுமி விடுப்பு எடுத்துக்கொண்டு பெற்றோரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கஜலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கஜலட்சுமி நேற்று பணியில் இருக்கும்போது திருப்போரூர் பெண் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி காவலர் கஜலட்சுமியை பெண்களை இழிவு படுத்தும் விதமாக தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த கஜலட்சுமி பணி முடிந்து பெண் காவலர்கள் தங்கும் விடுதிக்குச் சென்று விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்த கஜலட்சுமியை பார்த்த சக காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து காப்பாற்றியுள்ளனர்.
இந்தநிலையில், பெண் காவல் ஆய்வாளர் சக காவலர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாகவும், இதனால் இதனால் சக காவலர்கள் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் ஆய்வாளர் கலைச்செல்வி மீது விசாரணை நடத்த வேண்டும் என சக காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளதக கூறப்படுகிறது.