வறுமையிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி பெண் செய்த காரியம்! பொன்மகளே என நெகிழ்ந்து போன தமிழக முதல்வர்!!



women send 2 pavun gold chain for corono refund

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி அளிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதி உதவி செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும், குழந்தைகளும் கூட நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையை திறப்பதற்காக சென்ற போது, மக்களை சந்தித்தார். மக்கள் அவரிடம் மனுக்களை அளித்தனர். அப்பொழுது சௌமியா என்ற பெண் கொடுத்த கடிதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது அந்த பெண் தனது கடிதத்துடன் கொரோனா நிவாரண நிதிக்காக தனது 2 பவுன் தங்க சங்கிலியையும் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் அந்த கடிதத்தில், நான் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். எனது அப்பா ஆவின் ஓய்வுபெற்ற பணியாளர். எனது சகோதரிகள் இருவருக்கு திருமணமாகிவிட்டது. என் அம்மாவும் நிமோனியாவால் இறந்துவிட்டார். என் அப்பா பணி ஓய்வுபெற்ற தொகை அனைத்தும் அம்மாவின் மருத்துவத்திற்கே செலவாகிவிட்டது. நான் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறேன். ஒரு அம்மாவாக இருந்து எனக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். தனியார் நிறுவனத்திலாவது வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

இந்த கடிதம் தனது கவனத்தை ஈர்த்ததாக முதல்வர் முக ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். மேலும் பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.