மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கைகுழந்தையிடம் கைவரிசை காட்டிய பெண்! மடக்கி பிடித்த பொதுமக்கள்!!
கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கைக்குழந்தையுடன் மீன் மார்க்கெட் சென்று விட்டு பின், வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்த போது அருகில் இருந்த ஒரு பெண் அவரது ஷால்லை குழந்தையின் மேல் போடுவது போல் மூடி குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை திருடுவதற்கு முயற்சித்துள்ளார்.
இதனை பார்த்த குழந்தையின் தாய் அந்த பெண்ணை பிடிப்பதற்காக முயற்சித்த போது இந்த பெண் தப்பித்து ஓடவே, அருகில் இருந்தவர்களை உதவிக்கு சத்தம் போட்டு அழைத்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் உடனே அந்தப் பெண்ணை சுற்றி வளைத்துள்ளனர்.
பின் இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரணை செய்ததில் அந்தப் பெண் பொள்ளாச்சியில் உள்ள நரிக்குறவர் காலனி பகுதி சேர்ந்த 38 வயதுடைய பவானி என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.