தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!



yellow alert in tamilnadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  

சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

rainமேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் சாலையில் அதிக தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.