#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யோகா பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணிற்கு, ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து யோகா மாஸ்டர் செய்த மோசமான செயல்.!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது.
இந்தநிலையில், சென்னை, நங்கநல்லூா் பகுதியை சேர்ந்த 22 வயது பெண், கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் யோகராஜ் என்பவரிடம் யோகா பயின்று வந்துள்ளாா். யோகராஜ் கடந்த ஏப்.28-ஆம் தேதி யோகா பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரிடம் தவறாக நடந்துள்ளாா்.
மேலும், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் மகளிா் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து யோகா பயிற்சியாளரான யோகராஜை கைது செய்தனா்.