பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
என் நண்பனே போய்ட்டான்.. துக்கத்தில் தவித்து வந்த கல்லூரி மாணவன் செய்த காரியம்! கதறும் பெற்றோர்!!
நண்பன் இழந்த சோகத்தில் தினமும் தவித்து வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர், கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்தவர் பாசூரான். இவரது மகன் 17 வயது நிறைந்த மில்டன். இவர் பூந்தமல்லியில் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவரது நண்பன் புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார். 11ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உதயகுமார் கடந்த நவம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அப்போதிலிருந்து நண்பனின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மில்டன் மிகுந்த மன வருத்தத்தில் தவித்து வந்துள்ளார்.மேலும் தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அவரது குடும்பத்தினர்கள் அவரை காப்பாற்றி சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மில்டன் தனது நண்பன் இறந்த 5ஆம் தேதியே தானும் இறக்க முடிவு செய்து இன்று காலை தூக்கிட்டு கொண்டுள்ளார். அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மில்டனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.