மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உதயநிதி அண்ணா.. இந்தாங்க எனது உண்டியல் பணம்.! தம்பிக்கு நன்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்.!
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையில் தமிழகத்தில் பாதிப்பு உச்சத்திற்கு சென்று உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில்பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாள்தோறும் தொகுதியின் பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, ஜவஹர் ஹுசைன் கான் தெரு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமின் போது மோகன்-ஆனந்தி தம்பதியின் மகன் ஹீதேஷ் தனது உண்டியல் சேமிப்பை பெருந்தொற்று கால நிவாரண நிதியாக மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினான். தம்பிக்கு நன்றி. pic.twitter.com/l5DF6akCi7
— Udhay (@Udhaystalin) June 14, 2021
இந்தநிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, ஜவஹர் ஹுசைன் கான் தெரு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமின் போது மோகன்-ஆனந்தி தம்பதியின் மகன் ஹீதேஷ் என்ற சிறுவன் தனது உண்டியல் சேமிப்பை பெருந்தொற்று கால நிவாரண நிதியாக மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தம்பிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.